17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி

17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி
17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது இங்கிலாந்து டெஸ்ட் அணி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. முன்னதாக, இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஏழு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர், கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற்றது. டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய  இங்கிலாந்து அணி அதன் பின்னர், தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  அங்கு இங்கிலாந்து அணியினருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அங்கு ராவல்பிண்டி, கராச்சி, முல்தான் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் காயம் காரணமாக் ஷாகின் அப்ரிடி இடம் பெறவில்லை.

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:- பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சர்பராஸ் அகமது, ஷான் மசூத், ஷகில், சல்மான் ஆஹா, நசீம் ஷா, நவுமன் அலி, அப்துல்லா ஷாபிக், இமாம் உல் ஹக், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ராப், முகமது வாசிம், அப்ரார் அகமது, ஜாகித் மக்மூத், முகமது நவாஸ், அசார் அலி, முகமது அலி.

இங்கிலாந்து அணி விவரம்:- பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், வில் ஜாக்ஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜாக் லீச், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட், ரெஹான் அகமது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com