விளையாட்டு
பீல்டிங்க்குக்கு இடையூறு... இங்கி. வீரரை வெளியேற்றிய நடுவர்
பீல்டிங்க்குக்கு இடையூறு... இங்கி. வீரரை வெளியேற்றிய நடுவர்
பீல்டிங்க்குக்கு இடையூறு செய்ததாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், மூன்றாவது நடுவரால் வெளியேற்றப்பட்டார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ரன்னுக்காக ஓடினார். அப்போது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டம்பை நோக்கி எரிந்த பந்தினை அவர் தடுத்ததால், பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக நடுவரிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நடுவரின் உதவியை களநடுவர்கள் நாடினர். இறுதியில், ஜேசன் ராய் இடையூறு செய்ததாகக் கூறி, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.