இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் ஜோ ரூட் - ரசிகர்கள் நம்பிக்கை

இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் ஜோ ரூட் - ரசிகர்கள் நம்பிக்கை

இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் ஜோ ரூட் - ரசிகர்கள் நம்பிக்கை
Published on

உ‌லகக்கோப்பையில் நெருக்கடியான தருணங்களில் நேர்த்தியாக விளையாடும் இங்கிலாந்து நாயகன் ஜோ ரூட் அந்நாட்டு அணியின் வெற்றிக்கு வித்திடும் நாயகனாக இருப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

3 துறைகளிலும் முத்திரை பதிக்கும் ஜோ ரூட் உலகில் தலைசிறந்த ஒன் டவுன் பேட்ஸ்மேன்களுள் ஒருவர். நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடக்கூடியவர். இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் சரியும் போது, ஆணிவேர் போல அணியின் பேட்டிங்கை தாங்கி பிடிப்பவர் ஜோ ரூட்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார். 4 போட்டிகளில்‌ விளையாடி உள்ள ரூட், 279 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங்கில் மட்டுமன்றி பகுதி நேர பந்துவீச்சாளராகவும் கை கொடுக்கிறார் ரூட். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இரு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அப்போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.

இங்கிலாந்து அணியின் சிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். நடப்புத் தொடரில் இதுவரை 6 கேட்சுகள் பிடித்து , அதிக கேட்சுகள் பிடித்தவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ஜோ ரூட். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 துறைகளிலும் முத்திரை பதிக்கும் ஜோ ரூட் , இனி வரும் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திடும் நாயகனாக இருப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு தற்போது வரை விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் வெறும் 9.3 சதவிகிதம் தான் தவறான ஷாட்டுகளை ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com