வானவேடிக்கை காட்டிய ரோகித், விராட் கோலி - இந்திய அணி 224 ரன் குவிப்பு!
ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இருபது ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 224 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் (64), கோலி (80), சூரியகுமார் யாதவ் (32), ஹர்திக் பாண்ட்யா (39) ரன்களை குவித்தனர். அதன் மூலம் இந்தியா வலுவான டார்கெட்டை இங்கிலாந்துக்கு கொடுத்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் ரஷீத் மற்றும் ஸ்டோக்ஸை தவிர அனைத்து பவுளர்களும் ரன் வாரி வள்ளல்கள் போல பந்து வீசி இருந்தனர். ஓவருக்கு சராசரியாக இந்தியா 11.20 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாஸை இழந்திருந்தாலும் இந்தியா முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை குவித்துள்ளது.
இந்திய அணியின் பவுலர்கள் கூட்டணி நிச்சயம் இங்கிலாந்தை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜன் அணிக்குள் இருப்பது பலம்.

