உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன?

உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன?
உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன?

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பெயர் பட்டியல் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. அதே நாளில் ஆஸ்திரேலிய அணியின் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.  இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதனால் இந்த மூன்று அணிகளில் விளையாட போகும் வீரர்கள் யார்? யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு இங்கிலாந்து கேப்டனாக இயான் மார்கன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் மொயின் அலி, ஜானி பாரிஸ்டோவ், ஜாஸ் பட்லர், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹாலெஸ், லியாம் ப்லுன்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வைல்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜாசன் ராய், டாம் குரான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால் அந்நாட்டு சூழ்நிலைகள் அந்த அணிக்கு சாதகமாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள பட்லர், பாரிஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடுவதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

எனினும் இதுவரை சொந்தமண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை சொந்த மண்ணில் வென்று இங்கிலாந்து அணி இடம் பிடிக்கும் என இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மொத்தத்தில் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்து அணி மிகவும் சவாலான அணியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com