பாகிஸ்தான் சுற்றுப்பயணம் - நியூசிலாந்தை தொடர்ந்து பின்வாங்கும் இங்கிலாந்து?

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் - நியூசிலாந்தை தொடர்ந்து பின்வாங்கும் இங்கிலாந்து?

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் - நியூசிலாந்தை தொடர்ந்து பின்வாங்கும் இங்கிலாந்து?
Published on

அடுத்த மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது முடிவை 48 மணி நேரத்திற்குள் ஆலோசித்து பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் விளையாட கடைசி நிமிடங்களில் மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்களும், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கடும் ஏமாற்றமடைந்தனர். இவ்வாறான சூழலில் பாகிஸ்தானில் உள்ள தங்கள் பாதுகாப்பு தொடர்பு அதிகாரிகளிடம் சூழல் குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும், அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் குறித்து பின்னர் அறிவிப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com