உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதி பெற்ற அணிகள் எவை?

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதி பெற்ற அணிகள் எவை?
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதி பெற்ற அணிகள் எவை?

 
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள், கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி அணி, வடக்கு அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மூன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது. தனது பிரிவில் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணி 27 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதியை உறுதி செய்தது.
இங்கிலாந்து அணி, ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை 9 போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து அணி 7ல் வெற்றியும் 2 போட்டியை டிராவும் செய்துள்ளது. இதன் அடிப்படையில் 23 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணியும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

நெருக்கடியில் அர்ஜென்டினா, பெரு அணிகள்

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நேரடித் தகுதி பெற வேண்டுமானால், கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் இருக்கிறது. தற்போது பெரு, அர்ஜெர்டினா அணிகள் தலா 24 புள்ளிகளுடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. அர்ஜென்டினா அணி கடைசிப் போட்டியில் ஈக்வடாரையும், பெரு அணி கொலம்பியாவையும் எதிர்கொள்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com