மோசமான ஃபார்மா? இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு!

மோசமான ஃபார்மா? இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு!

மோசமான ஃபார்மா? இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு!
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பார்மில் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரவோர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுதாம்டனில் நடக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலஸ்டைர் குக்கும் ஜென்னிங்ஸூம் ரன்குவிக்க தடுமாறுகிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

(இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் அஸ்வின் சுழலில்  விக்கெட்டை இழந்த குக்)

குக், கடந்த 7 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜென்னிங்ஸ் 14 இன்னிங்ஸ் விளையாடியும் நிலைத்து நின்று ரன்கள் குவிக்கவில்லை.

இதுபற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரவோர் பெய்லிஸ் கூறும்போது, ‘குக் சிறந்த வீரர். அவரது ஆட்ட முறையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் சிறப்பாகவே விளையாடுகிறார். இப்போதும் அவர் கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். அவர் பந்துகளை சரியாகவே எதிர்கொள்கிறார். அவர் ஃபாமில் இல்லை என்று சொல்ல முடியாது. அவர் அதிக ரன்களை குவிப்பார். ஜென்னிங்ஸும் நன்றாக விளையாடுபவர்தான். அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com