மலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து

மலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து

மலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து
Published on

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட அங்கு சென்றுள்ளது. இந்த இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜோ ரூட் 71 ரன்களும் கேப்டன் மோர்கன் 92 ரன்களும் எடுத்தனர்.  இலங்கை தரப்பில் அனுபவ வீரர் மலிங்கா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் டிக்வெல்லா (9), உபுல் தாரங்கா(0), கேப்டன் சண்டிமால் (6), சனகா (8) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறி னார்கள். 9 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது இலங்கை அணி.ஐந்தாவது விக்கெட்டுக்கு இறங்கிய டி சில்வா, குசால் பெரேரா கூட்டணி ஓரளவு நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்தது. பெரேரா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திசாரா பெரேராவும் ((44) டி சில்வாவும் (36) பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

(திசாரா பெரேரா)

அணியின் ஸ்கோர் 29 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டோன், டாவ்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி னர். 92 ரன்கள் குவித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com