ஸ்டோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தது இந்திய அணி - 1000வது போட்டியை வென்றது இங்கிலாந்து

ஸ்டோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தது இந்திய அணி - 1000வது போட்டியை வென்றது இங்கிலாந்து
ஸ்டோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தது இந்திய அணி - 1000வது போட்டியை வென்றது இங்கிலாந்து

இந்திய அணியுடனான விறுவிறுப்பு நிறைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

பிர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. 194 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. 

43 ரன்களுடன் விராட் கோலியும், 18 ரன்களுடன் தினேஷ் கார்த்திக்கும் நான்காவது நாளில் ஆட்டத்தை தொடர்ந்தனர். மேலும் 2 ரன்கள் சேர்த்த தினேஷ் கார்த்திக், ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த கேப்‌டன் விராட் கோலி 51 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இஷாந்த் ஷர்மா 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

வெற்றிக்காக போராடிய ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2 வது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தனது 1000வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com