டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்கள் - பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளிய மாலன்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான டேவிட் மாலன் சர்வதேச டி20 களத்தில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் வீரரானர். மிகக்குறைந்த இன்னிங்ஸில் விளையாடி இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார். மொத்தமாக 24 இன்னிங்ஸ் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார் அவர்.
கடந்த 2017 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். ஐசிசி பேட்டிங் ரேங்கிங்கில் முதலிடத்தில் இருப்பவரும் மாலன் தான்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 26 இன்னிங்ஸிலும், கோலி 27 இன்னிங்ஸிலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 29 இன்னிங்ஸிலும், கே. எல். ராகுல் 29 இன்னிங்ஸிலும் ஆகியோர் மிக குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் எல்லோரையும் மாலன் முந்தியுள்ளார். எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.