டி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு ? : ஆஸி. - இங். நாளை பலப்பரீட்சை

டி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு ? : ஆஸி. - இங். நாளை பலப்பரீட்சை

டி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு ? : ஆஸி. - இங். நாளை பலப்பரீட்சை
Published on

சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார் ? என்ற பலப்பரீட்சையில் நாளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் களமிறங்கவுள்ளன.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றுவிட்டது. இருப்பினும் நாளை நடைபெறவுள்ள 3வது டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனென்றால் நாளை நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடிக்கவுள்ளது. இதனால் இரண்டு அணிகளும் நாளை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. நாளை சவுதம்டானில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் தற்போது 5736 புள்ளிகளுடன் 273 ரேட்டிங் பெற்று இங்கிலாந்து அணி முதலிடத்திலும், அதேபோல் 5724 புள்ளிகளுடன் 273 ரேட்டிங் பெற்று ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 266 ரேட்டிங்குடன் இந்தியா 3வது இடத்திலும், 261 ரேட்டிங்குடன் பாகிஸ்தான் 4வது இடத்திலும் இருக்கின்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com