விளையாட்டு
123 ரன்களில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இங்கிலாந்து
123 ரன்களில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 123 ரன்களில் சுருண்டது.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 123 ரன்களுக்கே ஆட்டமிழந்தனர். இதில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கிரான் பவல் 39 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியும் விக்கெட்களை இழந்து திணறியது. 24 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

