இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
Published on

ஏற்கெனவே தொடரை கைப்பற்றி விட்டதால் பெஞ்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படலாம்.  

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் பெஞ்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் விராட் கோலி இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா மீண்டும் கொண்டு வரப்படவுள்ளார். இவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஃபினிஷிங் ரோலில் ஹர்திக் பாண்டியா பக்கபலமாக இருக்கிறார்.

பவுலிங் யூனிட்டில் யுவேந்திர சாஹல் 2 போட்டிகளில் விளையாடிவிட்டதால், இந்த முறை ரவி பிஷ்னாய்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்துவீச்சில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோர் களமிறக்கப்படலாம். இவர்களுக்கு உறுதுணையாக பும்ரா விளையாடுகிறார். 4வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. அதேவேளையில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடைய இங்கிலாந்து முயற்சி செய்யும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான்

இதையும் படிக்க: தேர்வு குழுவில் நானிருந்தால் கோலியை இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்ய மாட்டேன் - அஜய் ஜடேஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com