\
உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
Published on

சீனாவில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இதன் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் அவர், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை அவர் வசப்படுத்தினார். 

ஏற்கெனவே இவர், பிரேசிலில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல், உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com