'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' ! எகிப்து வீரரின் தில்
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய அணிகள் சரிவையும், சின்ன அணிகள் வெற்றியையும் குவித்து வருகின்றன.
உலகளவில் பீர் பிரியர்கள் மத்தியில் பட்வெய்ஸர் பிராண்ட் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாகும். பட்வெய்ஸர் பீருக்காக ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொரு போட்டி இறுதியிலும் சிறந்த வீரருக்கான விருதை பட்வெய்ஸர் ஸ்பான்ஸர் செய்து வருகிறது. ஆனால், அந்த நிறுவனம் அளிக்கும் விருதையே ஒரு வீரர் வேண்டாமென மறுத்துள்ளார். ஆம், அவர்தான் எகிப்து அணியின் கோல் கீப்பர் முகமது எல்ஷனாவி.
உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து வென்றது. அந்த ஆட்டத்தில் எதிரணி கோலடிக்கும் வாய்ப்புகளை சிறப்பாக தடுத்ததால் சிறந்த வீரர் விருது கோல்கீப்பர் எல்ஷனாவிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மது அருந்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளதால், பட்வெய்ஸர் நிறுவனம் வழங்கிய விருதை ஏற்க எல்ஷனாவி மறுத்து விட்டார். விருதை பெற அவர் மறுக்கும் படம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.