இ சாலா கப் நமதாகுமா?- ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு!

இ சாலா கப் நமதாகுமா?- ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு!
இ சாலா கப் நமதாகுமா?- ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு!

இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கும் ஆர்சிபி அணி, பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. குஜராத் அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் விளையாடி, 10 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 20 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுவிட்டது. அறிமுக அணியாக சீசனுக்குள் நுழைந்தபோதும், ஐபிஎல்லில் முன்னாள் சாம்பியன்களை எல்லாம் வீழ்த்தி மிக வலுவான அணியாக திகழ்கிறது குஜராத் அணி. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டபோதும் இன்றும் முழு உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகள், 6 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றில் நுழைய போராடி வருகிறது. இந்த போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. கடைசியாக விளையாடிய போட்டியில் பஞ்சாப் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆர்சிபி அணி களமிறங்க உள்ளது.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப்புக்கு பதிலாக பெர்குசன் களமிறங்குகிறார். பெங்களூரு அணியில் முகமது சிராஜுக்கு பதிலாக சித்தார்த் கவுல் களமிறங்குகிறார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, சுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் , ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்க, ஹர்சல் படேல், சித்தார்த் கவுல், ஜோஷ் ஹேசில்வுட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com