விளையாட்டு
லண்டன் தாக்குதலில் பலியானவர்களுக்கு வீரர்கள் அஞ்சலி
லண்டன் தாக்குதலில் பலியானவர்களுக்கு வீரர்கள் அஞ்சலி
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக லண்டன் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இருநாட்டு வீரர்களுடன், மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எழுந்து நின்று லண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.