“தோனி போன்ற ஜாம்பவான் கீழ் விளையாட உள்ளேன்” - மகிழ்ச்சியில் சாய் கிஷோர்

“தோனி போன்ற ஜாம்பவான் கீழ் விளையாட உள்ளேன்” - மகிழ்ச்சியில் சாய் கிஷோர்

“தோனி போன்ற ஜாம்பவான் கீழ் விளையாட உள்ளேன்” - மகிழ்ச்சியில் சாய் கிஷோர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தமிழக வீரர் சாய் கிஷோர் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ரஞ்சிக் கோப்பை, TNPL உள்ளிட்ட போட்டிகளிலும் இடது கை சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்து வரும் தமிழக வீரர் சாய் கிஷோரை, சென்னை அணி ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாய் கிஷோர் முந்தைய காலங்களில் சென்னை அணிக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்த அனுபவம் கொண்டவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் சாய் கிஷோர் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார். அதில், “முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகன் நான், சென்னையில் சி.எஸ்.கே போட்டிகள் நடைபெறும் போது ரசிகர்கள் அனைவரின் ஆதரவு பயங்கரமாக இருக்கும், அப்படிப்பட்ட அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சென்னை அணி ஜெயிக்க என்னால் முடிந்ததை செய்வேன்.

ஏலம் முழுவதையும் பார்த்துக்கொண்டு இருந்தேன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அதிக போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி உள்ளதால் அது குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளேன், அதனால் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது. மேலும் தோனி போன்ற ஒரு ஜாம்பவான் கீழ் விளையாட உள்ளது தன்னம்பிக்கை அளிக்கிறது, எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த அளவு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com