"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்

"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்
"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் துத்தி சந்த். 23 வயதான இவர் 2018ல் நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சி பெற்றுவரும் துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான துணையை தேடிக்கொண்டேன். எனது ஊரிலேயே சில வருடங்களக்கு முன் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். நம் துணையை தேடிக்கொள்வதில் அனைவருக்கும் முழு சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறேன். நான் என்றுமே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறேன். அது ஒரு தனிமனித சுதந்திரம், தேர்வு. எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன். தற்போது என் கவனம் முழுவதும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது. 

எனது முடிவைக் கொண்டு என்னையோ அல்லது என் விளையாட்டையோ யாரும் முடிவு செய்ய முடியாது என நம்புகிறேன், இது என் தனிப்பட்ட முடிவு. நான் கடந்த 10 வருடங்களாக ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இன்னும் 5 அல்லது 7 வருடங்களுக்கு விளையாட்டுத்துறையில் இருப்பேன். என்னை ஊக்கப்படுத்தவும், என்னுடன் பயணிக்கவும் எனக்கு ஒருவர் தேவை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தன்பாலினத்தில் துணையை தேர்வு செய்துள்ள முதல் விளையாட்டு வீரர் துத்தி சந்த் ஆவார். 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலின பரிசோதனை மூலம் துத்தி சந்துக்குக்கு ஆண்மைத்தன்மை இருப்பதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய துத்தி, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மன்றத்தை அணுகி நியாயம் கோரினார். இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு துத்தி மீதான தடை நீக்கப்பட்டது.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com