\
துலீப் டிராபி போட்டி: அங்கித் கல்சி சதம், கருண் நாயர் 99 !

துலீப் டிராபி போட்டி: அங்கித் கல்சி சதம், கருண் நாயர் 99 !

துலீப் டிராபி போட்டி: அங்கித் கல்சி சதம், கருண் நாயர் 99 !
Published on

துலீப் டிராபி போட்டியில் இந்திய ரெட் அணியின் அங்கித் கல்சி அபார சதம் அடித்தார். கருண் நாயர் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி பெங்களூரு அருகில் உள்ள் அலூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ரெட் மற்றும் இந்தியா புளு அணிகள் மோதி வருகின்றன.  முதலில் ஆடிய இந்திய ரெட் அணி, முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கருண் நாயர் 99 ரன்களில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் சதத்தை இழந்தார்.

அங்கித் கல்சி சதம் அடித்தார். அவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 50 ரன்கள் எடுத்தார். இந்திய புளு தரப்பில் திவேஷ் பதானியா 4 விக்கெட்டுகளும் சக்சேனா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய புளு அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com