\
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம்

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம்

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம்
Published on: 

தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நாளை தொடங்குகிறது.

மகளிருக்கான ஏ பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோ, ஜப்பானின் யமாகுச்சி, சயாகோ சட்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆடவர் பிரிவில், டென்மார்க்கின் விக்டர் அக்சல்சன், சீனாவின் ஷி யுகி ஆகியோர் அடங்கிய பி பிரிவில் ஸ்ரீகாந்த் இடம்பெற்றுள்ளார். லீக் சுற்றில் ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 வீரர்களுடன் தலா ஒரு போட்டியில் விளையாடவுள்ளனர். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர். பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை எதிர்கொள்கிறார். ஸ்ரீகாந்த் டென்மார்க்கின் அக்சல்சனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com