உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: மகுடம் சூடும் முனைப்பில் சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: மகுடம் சூடும் முனைப்பில் சிந்து
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: மகுடம் சூடும் முனைப்பில் சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தார். தனது பிரிவில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீன வீராங்கனை சென் யுஃபெய்யை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டியில் சிந்து 21-15, 21-18 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாக்குச்சியை எதிர்த்து சிந்து விளையாட உள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com