துரோனாச்சார்யா விருது பெயர் பட்டியல் - மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்

துரோனாச்சார்யா விருது பெயர் பட்டியல் - மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்
துரோனாச்சார்யா விருது பெயர் பட்டியல் - மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்

துரோணாச்சார்யா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் இருந்து தமிழக வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

மாரியப்பனின் பயிற்சியாளர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. இருப்பினும், கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த சத்யநாராயணா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பயற்சி அளித்தவர். முன்னதாக, சத்யநாராயணாவுக்கு துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டவுடன் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com