இலங்கை வீரரை வாழ்த்திய டிராவிட், கோலி! என்ன காரணம்? யார் அவர்?

இலங்கை வீரரை வாழ்த்திய டிராவிட், கோலி! என்ன காரணம்? யார் அவர்?

இலங்கை வீரரை வாழ்த்திய டிராவிட், கோலி! என்ன காரணம்? யார் அவர்?
Published on

இந்தியா - இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின்போது ராகுல் டிராவிட், விராட் கோலி இருவரும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை வீரர் சுரங்கா லக்மாலை தேடிச் சென்று வாழ்த்தினர்.

இந்தியா - இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிதான் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மாலுக்கு கடைசி போட்டியாகும். தனது கடைசி டெஸ்ட்டில் விளையாடும் இலங்கை வீரர் சுரங்கா லக்மாலுக்கு வாழ்த்து தெரிவிக்க இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி வீரர் விராட் கோலி ஆகியோர் இலங்கை அணி அமர்ந்திருந்த இடத்திற்குச் நேரில் சென்றுவிட்டனர். கோலியும் டிராவிட்டும் இலங்கை வீரர் சுரங்காவுடன் கைகுலுக்கி, அவரது முதுகில் தட்டிக்கொடுத்தனர். இந்த சைகை இந்திய ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

சுரங்கா லக்மாலுடன் டிராவிட் மற்றும் கோலி இருக்கும் வீடியோவை பிசிசிஐ சமூக ஊடகங்களில் வெளியிட்டது. “சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற தயாராகி வரும் சுரங்கா லக்மாலுக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் வாழ்த்துகள்” என குறிப்படப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com