\
டிராவிட்டையும் ஜாகிரையும் அவமதித்துவிட்டார்கள்: குஹா

டிராவிட்டையும் ஜாகிரையும் அவமதித்துவிட்டார்கள்: குஹா

டிராவிட்டையும் ஜாகிரையும் அவமதித்துவிட்டார்கள்: குஹா
Published on

ராகுல் டிராவிட் மற்றும் ஜாகிர்கானுக்கு அவமானம் இழைக்கப்பட்டதாக, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகிகள் குழு உறுப்பினர், ராமச்சந்திர குஹா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் பதவி நியமனத்துக்கு  கிரிக்கெட் அணியின் நிர்வாகக் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. ராகுல் டிராவிட்டின் வெளிநாட்டு பேட்டிங் பயிற்சியாளர் பதவி, ஜாகிர்கானின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராமச்சந்திர குஹா, ’ராகுல் திராவிட், ஜாகிர்கான் ஆகியோரின் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். கும்ப்ளேவை அவமரியாதையாக நடத்தியதுடன் இப்போது ராகுல் டிராவிட்டையும் ஜாகிர்கானையும் நடத்தியுள்ளனர். கிரிக்கெட் மைதானத்தில் தங்களை நிரூபித்த வீரர்களை இப்படி அவமானப்படுத்தியது தேவையற்றது’ என்று கூறியுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com