"தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமே" ஹர்பஜன் சிங்

"தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமே" ஹர்பஜன் சிங்
"தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமே" ஹர்பஜன் சிங்

மகேந்திரசிங் தோனி மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடமாட்டார் என கருதுவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காகவே அவர் தற்போது கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் எனவும், ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணிக்கு விளையாடுவாரா என்பது சந்தேகமே எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சி டிராஃபியில் பங்கேற்றுள்ள ஜார்க்கண்ட் அணியுடன், தமது சொந்த ஊரான ராஞ்சியில் தோனி பயிற்சியில் ஈடுபட்டார். புதிய பவுலிங் மெஷின் வாங்கியுள்ள தோனி, அதன்மூலம் தமது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிசிசிஐ-யின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக நீடிப்பதால், தோனி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், தோனி தங்களுடன் திடீரென பயிற்சியில் ஈடுபட்டது ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக ஜார்க்கண்ட் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com