”முன்னாள் வீரர்களின் அனுபவங்களை வீணாக்க வேண்டாமே” - ராகுல் ட்ராவிட் கோரிக்கை

”முன்னாள் வீரர்களின் அனுபவங்களை வீணாக்க வேண்டாமே” - ராகுல் ட்ராவிட் கோரிக்கை
”முன்னாள் வீரர்களின் அனுபவங்களை வீணாக்க வேண்டாமே” - ராகுல் ட்ராவிட் கோரிக்கை

முன்னாள் வீரர்களின் அனுபவங்களை மாநில விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.

பிசிசிஐ மற்றும் என்சிஏவால் ஏற்படுத்தப்பட்ட வெப்மினார் அண்மையில் நடந்தது. இதில் என்சிஏ தலைவர் ராகுல் ட்ராவிட், சுஜித் சோம சுந்தர், பயிற்சியாளர் ஆஷிஷ் கெளஷிக் உள்ளிட்டோர் தலைமை தாங்கி பேசினர்.

இந்த வெப்மினாரில் மாநில கிரிக்கெட் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி குறித்த ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டன. அப்போது பேசிய ராகுல் ட்ராவிட் “ மாநில அளவிலான கிரிக்கெட் குழுக்கள் முன்னாள் வீரர்களை அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தப் பகுதியில் பயன்படுத்த வேண்டும் என்றும் கிரிக்கெட்டில் அவற்றை ஒருங்கிணைக்க முடிந்தால், அவர்களின் அனுபவமும் நிபுணத்துவமும் வீணாகாது” என்று பேசியுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சிகள் இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் மாநில கிரிக்கெட் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சி அளிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com