90 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத டான் பிராட்மேனின் சாதனை !

90 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத டான் பிராட்மேனின் சாதனை !
90 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத டான் பிராட்மேனின் சாதனை !

ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் மேற்கொண்ட சாதனை 90 ஆண்டுகள் கழித்தும் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

1930 ஆம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான புகழ்ப்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிகப்பெரிய பேட்ஸ்மேன் டான் பிராட்மேன் 974 ரன்களை எடுத்தார். அந்தத் தொடரில் அவரின் சராசரி 139.14, அதில் மூன்றாவதுப் போட்டியில் 334 ரன்களை எடுத்தார் பிராட்மேன்.

1930 இல் நடைபெற்ற ஆஷஸ் தொடர் ஆகஸ்ட் 22 ஆம் தேதிதான் நிறைவடைந்தது. பிராட்மேன் அந்த டெஸ்ட் தொடரில் மேற்கொண்ட சாதனை இப்போது வரை கிரிக்கெட் உலகில் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் முறியடிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com