ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நடால் அதிர்ச்சித் தோல்வி!

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நடால் அதிர்ச்சித் தோல்வி!
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நடால் அதிர்ச்சித் தோல்வி!

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார்.

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, 2-ம் நிலை வீரரும் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. 2-வது வெற்றியை ருசித்த டொமினிக் திம் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளார். 2-வது ஆட்டத்தில் ஆடிய நடாலுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com