இந்தியாவுக்கு பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வருகிறதா?
Battlegrounds Mobile India : இந்தியாவுக்கு பப்ஜி மொபைல் கேம் ரிட்டர்ன்ஸ்?
இந்தியாவில் சீன நாட்டின் மொபைல் போன் அப்ளிகேஷன்களை தடைவிதித்ததை தொடர்ந்து பிரபல மல்டி பிளேயர் மொபைல் கேமான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது. அப்போது முதலே பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா என காத்துக்கிடந்த பப்ஜி பிரியர்களுக்கு இந்த செய்தி தித்திக்கும். தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்துள்ளது.
கூடிய விரைவில் இந்த கேம் வெளியாகும் என KRAFTON தெரிவித்துள்ளது.
முழுவதும் இந்தியாவில் மட்டுமே விளையாடும் வகையில் இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்த கேம் லான்ச் செய்யப்படுவதற்கு முன்னதாக முன்பதிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்ஜியில் இருந்த சகல வசதிகளும் இதில் இருக்கும் என்கிறது அந்நிறுவனம். மேலும் பயனர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்க இதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கேமின் மோஷன் போஸ்டர் ஒன்றும் இப்போது வெளியாகி உள்ளது.