பந்து வீச்சில் அசத்தும் நடராஜன் : டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா?

பந்து வீச்சில் அசத்தும் நடராஜன் : டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா?

பந்து வீச்சில் அசத்தும் நடராஜன் : டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா?
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அயலக மண்ணில் அபாரமாக பந்து வீசி அசத்தி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ‘யார்க்கர்’ நடராஜன். இதுவரை அவர் விளையாடிய போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் ஹாட் டாக்காக உள்ளது. 

“வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் X - FACTOR ஆக நடராஜன் இருப்பார். இடது கை பந்துவீச்சாளராக உள்ள நடராஜன் நிச்சயம் தனது ஆங்கிளின் மூலம் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வல்லமை அவரிடம் உள்ளது. டெத் ஓவரில் நடராஜன் மாதிரியான இடக்கை பந்து வீச்சாளரின் பங்களிப்பு இந்தியாவுக்கு அவசியம் தேவை” என சொல்லியுள்ளார் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண்.

நடராஜன் எங்களுக்கு கிடைத்து வொயிட் பால் கிரிக்கெட்டின் சொத்து என கோலி சொல்லியுள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்கிய நடராஜன் பத்து ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பத்து ஓவரை மூன்று ஸ்பெல்களாக வீசி இருந்தார். முதல் ஸ்பெல்லில் அபாரமாக பந்து வீசி லபுஷேன் விக்கெட்டை வீழ்த்திய அவரை அடுத்த இரண்டு ஸ்பெல்லில் அடித்து ஆடி விட்டனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள். 

“முதல் சர்வதேச போட்டி என்ற பதட்டம் இருந்திருக்கலாம். நடராஜன் இயற்கையாகவே ஒரு DEFENSIVE பவுலர். பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தும் வல்லமை அவரிடம் உள்ளது” என அண்மையில் சொல்லியிருந்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி.

அவர் சொன்னதை போலவே நடராஜன் விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதில் ஐந்து ரன்கள் ஓவர் த்ரோவினால் கொடுத்திருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இரண்டாவது முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக கொண்டு லைனை டைட்டாக வீசி இருந்தார் நடராஜன். பும்ரா, ஷமி மாதிரியான பவுலர்கள் இல்லாத நிலையில் பவர் பிளேயில் விக்கெட்டை வீழ்த்தியதோடு, டெத் ஓவரில் அபாரமாக பந்து வீசி அசத்தினார். நான்கு ஓவர்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அவர் வீசியிருந்தார்.

இதில் எட்டு டாட் பால்களும் அடங்கும். நடராஜன் களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியில் நடராஜன் பங்களிப்பும் உள்ளது. இதே ஃபார்மில் நடராஜன் விளையாடினால் நிச்சயம் இந்திய அணியில் டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைக்கும். கிடைக்க வேண்டும். அது தான் கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com