“நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரி வருவாரா?” என்ன சொல்கிறார் வார்னர்

“நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரி வருவாரா?” என்ன சொல்கிறார் வார்னர்

“நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரி வருவாரா?” என்ன சொல்கிறார் வார்னர்
Published on

சிட்னியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் களம் இறங்குவார் என தெரிகிறது. அதற்கு உறுதி சேர்க்கும் விதமாக அவர் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச சரியானவரா என்பதற்கு பதில் கொடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். 

நடராஜனும், வார்னரும் ஐபிஎல் தொடரில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜன் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற போது முதல் ஆளாக வந்து சமூக  வலைதளத்தில் வார்னர். நடராஜனின் ஐபிஎல் கேப்டனான வார்னரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 

“நடராஜனின் டி20 சக்ஸஸ் டெஸ்ட் போட்டிகளிலும் தொடருமா?” என்பது தான் அந்த கேள்வி. “நல்ல கேள்வி. ஆனால் அதை உறுதியாக சொல்ல முடியாது. நட்டு நல்ல லைனில் சிறப்பாக பந்து வீசுபவர். இருப்பினும் அது டெஸ்ட் போட்டிகளில் எந்த அளவுக்கு எடுபடும். தொடர்ந்து அடுத்தடுத்து பந்து வீசும் போது ஒரே லைனை அவர் எப்படி கேரி செய்வார்  என்பதை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் அதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லிவிட முடியாது. 

கடந்த போட்டியில் அசத்திய சிராஜை போல சிட்னி டெஸ்டுக்கான அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டால் அவரும் அறிமுக வீரராக களம் இறங்கி அசத்தலாம்” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com