புதிய சர்ச்சையில் சிக்கிய ரோகித் ஷர்மா! - ட்விட்டரில் கிளம்பிய ஆதரவும், எதிர்ப்பும்!

புதிய சர்ச்சையில் சிக்கிய ரோகித் ஷர்மா! - ட்விட்டரில் கிளம்பிய ஆதரவும், எதிர்ப்பும்!
புதிய சர்ச்சையில் சிக்கிய ரோகித் ஷர்மா! - ட்விட்டரில் கிளம்பிய ஆதரவும், எதிர்ப்பும்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. வரும் வியாழன் அன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி மற்றும் பிருத்வி ஷா என ஐந்து வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து வீரர்களும் அங்குள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டதாக தெரிகிறது. அந்த புகைப்படங்களும், அவர்கள் சாப்பிட்ட உணவுக்கான ரசீதுகளும் இணையத்தில் வைரலாகின. 

அந்த ரசீதை ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள் ரோகித் சர்மா மற்றும் குழுவினர் சாப்பிட்ட ஐட்டங்களை இப்போது பட்டியலிட்டு வருகின்றனர். 

இறால், பன்றி இறைச்சி, சிக்கன் மற்றும் பீஃப் சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து ரோகித் ஷர்மாவை ரசிகர்கள் ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஒருபக்கம் அவரது ஹேட்டர்ஸ்கள் தெறிக்கவிட்டால் அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ரோகித் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அணியினருடன் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்கள் ட்வீட்கள் சில...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com