ரெடியான அம்பத்தி ராயுடு... புதிய நம்பிக்கையில் சிஎஸ்கே..!

ரெடியான அம்பத்தி ராயுடு... புதிய நம்பிக்கையில் சிஎஸ்கே..!
ரெடியான அம்பத்தி ராயுடு... புதிய நம்பிக்கையில் சிஎஸ்கே..!

துபாயில் நடைபெறும் நடப்பு ஐபிஎல் சீஸனின் 14-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாட உள்ளன.

இரு அணிகளுமே புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இந்த ஆட்டத்தில் ஆடுகின்றன. 

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை கடந்த ஆட்டத்தில் வீழ்த்தி அசத்தியது ஐதராபாத். அதே நேரத்தில் சென்னை தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை தழுவியது. 

குறிப்பாக சென்னை அணியின் டிரம்ப் கார்டான அம்பத்தி ராயுடு தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ராஜஸ்தான் மற்றும் டெல்லி உடனான போட்டியில் விளையாடவில்லை. 

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட ராயுடு நூறு சதவிகிதம் ஃபிட் என சொல்லப்பட்டுள்ளது. 

அதனால் அவர் ஆடும் லெவனில் இடம்பிடிப்பதும் உறுதியாகியுள்ளது. 

அதே போல ஆல் ரவுண்டர் பிராவோவும் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களது வருகை சென்னை அணியை வெற்றி பாதைக்கு திருப்பலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com