“வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட் செய்ய வேண்டாம் என டிராவிட் அட்வைஸ் செய்தார்”- ரஹானே
வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது அதிக நேரம் பேட் செய்ய வேண்டாம் என்றும், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை வழிநடத்தும்போது தேவையில்லாத அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனக்கு அட்வைஸ் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ரஹானே.
“ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து நாங்கள் ஆஸ்திரேலியா பறக்க தயாராக இருந்தபோது ராகுல் பாய் (அண்ணன்) எனக்கு போன் செய்தார். அப்போது அதிகம் ஸ்ட்ரெஸ்ஸாக வேண்டாம். முதல் போட்டிக்கு பிறகு நீங்கள் தான் அணியை வழிநடத்த உள்ளீர்கள். எதை நினைத்தும் வருந்த வேண்டாம். மனதளவில் திடமாக இருங்கள். வலைப்பயற்சியில் அதிக நேரம் பேட் செய்ய வேண்டாம். அணியை எப்படி வழிநடத்துவது, வீரர்களுக்கு எப்படி உத்வேகம் கொடுப்பது என்பதை மட்டும் திட்டமிடுங்கள். போட்டியின் முடிவுகள் குறித்து கவலை கொள்ளாதீர்கள் என சொல்லியிருந்தார்” என்கிறார் ரஹானே.
அடிலெய்ட் போட்டியில் இந்திய அணியை அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியிருந்தபோதும் அடுத்த மூன்று போட்டிகளில் திறம்பட இந்திய அணியை வழிநடத்தி 2 - 1 என தொடரை கைப்பற்ற உதவியது ரஹானேவின் கேப்டன்சி.

