விளையாட்டு
சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகள் - ஸ்டாலின்
சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகள் - ஸ்டாலின்
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள நடராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! நடராஜனுடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்! அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நடராஜன், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.