‘1000 கி.மீ பயணித்து வந்திருக்கிறேன்’-ரசிகரின் ட்விட்-க்கு தினேஷ் கார்த்திக் ஹார்ட் ரிப்ளை

‘1000 கி.மீ பயணித்து வந்திருக்கிறேன்’-ரசிகரின் ட்விட்-க்கு தினேஷ் கார்த்திக் ஹார்ட் ரிப்ளை
‘1000 கி.மீ பயணித்து வந்திருக்கிறேன்’-ரசிகரின் ட்விட்-க்கு தினேஷ் கார்த்திக் ஹார்ட் ரிப்ளை

ஆர்சிபி அணிக்காக ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து போட்டியை காண வந்ததாக கூறும் “ஈ சாலா கப் நம்தே” எனும் பேனரை ஏந்தி நிற்கும்படி பகிர்ந்த ட்விட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. வழக்கம்போல ஆர்சிபி அணி தடுமாற்றத்துடன் விளையாடியது. அந்த அணியின் மிடில்-ஆர்டர் மொத்தமாக சரிந்து விழ, தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒருமுறை தன் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டார். 34 பந்துகளில் இருந்து 194.1 ஸ்டிரைக் ரேட்டில் 66 ரன்களை குவித்தார் தினேஷ்.

ஒரு கட்டத்தில் 140 ரன்களுக்குள் அமுங்கிவிடும் நிலையில் இருந்த அணியை, தனியாளாக தாங்கி 189 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்ட வைத்தார் தினேஷ் கார்த்திக். 2வதாக விளையாடிய டெல்லி அணி 173 ரன்களை மட்டுமே சேர்க்க, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது பெங்களூரூ. இதற்கிடையில் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகர் ஒருவர் ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து இந்த போட்டியை காண வந்துள்ளார். "EE SALA CUP NAMDE" எனும் ஆர்சிபி அணியின் வெற்றி முழக்கத்தை பேனரில் பிடித்தபடி இருந்த ரசிகரின் புகைப்படம் வைரலானது.

ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாடும் ஆர்சிபி அணிக்கு இன்னும் கோப்பை மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 6 முறை ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து 3 முறை பைனல் வரை வந்தும் கோப்பை இன்னும் அந்த அணிக்கு கைகூட வில்லை. இருப்பினும் சென்னை, மும்பை அணிக்கு நிகராக ரசிகர்கள் பலத்தையும் பெற்று திகழ்கிறது. தோற்றாலும் இதயங்களை வெல்லும் அணியாக ஆர்சிபி திகழ்வதற்கு அந்த தீவிர ரசிகர்களே காரணம்.

அப்படி ஒரு ரசிகரின் “ஈ சாலா கப் நம்தே” பேனர் புகைப்படத்திற்கு ஆர்சிபி அணியின் இந்த சீசன் நம்பிக்கை நட்சத்திரம் பதிலளித்துள்ளார். இந்த முறை கோப்பை நமக்கே என்று பொருள்படும் வகையில் “Hope the drive was worth it” என்று பதிலளித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சிலாகித்து பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com