அடுத்தடுத்த வெற்றிகள்... ஆனால் கேப்டன் பொறுப்பை துறந்த தினேஷ் கார்த்திக்: காரணம் இதுதான்!

அடுத்தடுத்த வெற்றிகள்... ஆனால் கேப்டன் பொறுப்பை துறந்த தினேஷ் கார்த்திக்: காரணம் இதுதான்!
அடுத்தடுத்த வெற்றிகள்... ஆனால் கேப்டன் பொறுப்பை துறந்த தினேஷ் கார்த்திக்: காரணம் இதுதான்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை இயான் மார்கனிடம் தினேஷ் கார்த்திக் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை 30க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் முன்னேறிச்செல்ல அனைத்து அணிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் 10 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது. 

தினேஷ் கார்த்திக் தலைமையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை இங்கிலாந்து வீரர் இயான் மார்கனிடம் ஒப்படைக்க தினேஷ் கார்த்திக் முடிவு செய்திருக்கிறார். கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு, தனது கவனம் முழுவதையும் பேட்டிங்கில் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர், “தினேஷ் கார்த்திக் போன்ற வீரர் எங்களுக்கு கேப்டனாக கிடைத்தது அதிர்ஷ்டம். அவர் எப்போதும் அணியை முன்னேற்றுவதை முதலாக நினைப்பார். அவரது இந்த முடிவு எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இந்த முடிவை எடுப்பதற்கும் ஒரு சிறந்த தைரியம் வேண்டும். அதேசமயம் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கொல்காத்தா அணியை வழிநடத்துவதால் அணியின் மேலும் முன்னேறிச்செல்லும் என நம்புகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com