டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் சாதிக்க முடியும்: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் சாதிக்க முடியும்: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் சாதிக்க முடியும்: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
Published on

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் தம்மால் சாதிக்க முடியும் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என்று கூறியுள்ள அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததன் மூலம் தமது கனவு நிறைவேறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக மேலும் பேசிய தினேஷ் கார்த்திக், டெஸ்ட் போட்டிகளில் எனது பேட்டிங்கின் மூலம் மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று நம்புகிறேன். விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்து டெஸ்ட் போட்டிகளுக்கான வெள்ளைச் சீருடை அணிய விரும்புகிறேன் என்று தெரிவித்தார். விக்கெட் கீப்பிங் பணியை முழுமையாகக் கைவிடும் எண்ணமில்லை என்று கூறிய அவர், அதேநேரம் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவும், நல்ல ஃபீல்டராகவும் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரை சதமடித்த தினேஷ் கார்த்திக், டி20 போட்டியில் 48 ரன்கள் குவித்தார்.  அதேநேரம், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக இடம் கிடைக்கவில்லை. அவர் கடந்த 2010 ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com