போதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரர் கைது

போதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரர் கைது

போதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரர் கைது
Published on

போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே கைது செய்யப்பட்டார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே. சமீபத்தில் தென்னாப் பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இவரது அதிரடியால் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்க பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர் இன்று அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பு, கின்சி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். வெரல்லா பகுதியில் வந்தபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதினார். இதில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்து வமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார், கருணாரத்னேவிடம் விசாரித்தபோது, அவர் குடி போதையில் இருந்தது தெரிய வந்தது. பின் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com