விராட் கோலியை இந்திய அணிக்கு தேர்வு செய்தது எப்படி ? - மனம் திறந்த வெங்சர்கார்

விராட் கோலியை இந்திய அணிக்கு தேர்வு செய்தது எப்படி ? - மனம் திறந்த வெங்சர்கார்

விராட் கோலியை இந்திய அணிக்கு தேர்வு செய்தது எப்படி ? - மனம் திறந்த வெங்சர்கார்
Published on

தற்போதைய கேப்டன் விராட் கோலியை இந்திய அணிக்கு தேர்வு செய்தது குறித்து முன்னாள் அணித்தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்கார் மனம் திறந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. அதே ஆண்டு விராட் கோலி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்திய அணிக்கு தேர்வுக்குழுத் தலைவராக இருந்த திலிப் வெங்சர்கார் தான், விராட் கோலியை அணிக்கு தேர்வு செய்தார்.

இந்நிலையில் விராட் கோலியை தேர்வு செய்தது எப்படி ? என ஃபேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் வெங்சர்கார் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவிற்கு எதிராக விராட் கோலி விளையாடியபோது பார்த்துள்ளேன். அப்போது அவருக்கு 15 வயது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான அணியில் கோலி சிறப்பாக விளையாடினார்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் இந்திய தேர்வுக்குழு 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அணிக்குள் கொண்டுவர முடிவு செய்ததாகவும், குறிப்பாக இறுதிவரை பேட்டிங் செய்து போட்டியை முடிக்கும் ஃபினிஷர்களை தேர்வு செய்ய முடிவெடுத்ததாக வெங்சர்கார் கூறினார். அப்போது இந்திய அணித் தேர்வுக்குழுவின் தலைவராக  தான் இருந்ததாகவும், தாங்கள் முதலில் விராட் கோலியை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

ஏனென்றால், ஒருமுறை விராட் கோலி ஆஸ்திரேலிய ஏ அணியுடனான போட்டியில் களமிறங்கி 120 ரன்களுக்கு மேல் அடித்ததாகவும், அவர் சதம் அடித்தவுடன் அவுட் ஆகிவிடாமல் இறுதிவரை விளையாடி போட்டியை வெற்றிபெற நினைத்ததாகவும் குறிப்பிட்டார். கோலியின் அந்த முயற்சி தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com