”நூறாவது சதம் தாமதமான போது எனக்கு எப்படியெல்லாம் அட்வைஸ் செய்தார்கள்” சச்சின்

”நூறாவது சதம் தாமதமான போது எனக்கு எப்படியெல்லாம் அட்வைஸ் செய்தார்கள்” சச்சின்

”நூறாவது சதம் தாமதமான போது எனக்கு எப்படியெல்லாம் அட்வைஸ் செய்தார்கள்” சச்சின்
Published on

கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுலர். 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நூறு சதங்களை அடித்துள்ள ஒரே பேட்ஸ்மேனும் சச்சின் தான். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர் கடந்த 1990இல் ஆகஸ்ட் 14 அன்று தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்தார். 

அதனை நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தனது முதல் மற்றும் நூறாவது சதத்திற்குமான வித்தியாசம் குறித்து பேசியுள்ளார் சச்சின்.

‘நான் எனது முதல் சதத்தை பதிவு செய்த போது அடுத்தடுத்து அதே போல 99 சதங்களை பதிவு செய்வேன் என எதிர்பார்க்கவில்லை. 

ஆனால் நான் 99 சதத்திலிருந்து நூறாவது சதத்தை எட்டுவதற்குள் பலரும் நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அட்வைஸ் செய்தனர். அப்படி அட்வைஸ் செய்த அனைவரும்  நான் அதற்கு முன்னர் எடுத்திருந்த 99 சதங்களை மறந்துவிட்டனர்’ என ட்விட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com