“பேட்டிங் செய்யும்போது இறந்தாலும் பரவாயில்லை”- ஹெல்மெட் பற்றி விவ் ரிச்சர்ட்ஸ்

“பேட்டிங் செய்யும்போது இறந்தாலும் பரவாயில்லை”- ஹெல்மெட் பற்றி விவ் ரிச்சர்ட்ஸ்
“பேட்டிங் செய்யும்போது இறந்தாலும் பரவாயில்லை”-  ஹெல்மெட் பற்றி விவ் ரிச்சர்ட்ஸ்

தான் கிரிக்கெட் விளையாடும் காலங்களில் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் காலம் கடந்த சிறந்த பேட்ஸ்மேன்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் நபராக விவ் ரிச்சர்ட்ஸ் இருப்பார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையிலும் ‘தி கிரேட் ரிச்சர்ட்ஸ்’ என்று தான் இவர் அழைக்கப்படுகிறார். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களின் மனதில் இன்றும் இவர் நிலைத்திருக்கிறார். இவரது சிறப்பே வேகப்பந்து வீச்சுகளையும் ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொள்வது தான். பலர் அறிவுறுத்தியும் இவர் அந்தக் காலத்தில் ஹெல்மெட் அணியாமல் விளையாடியிருக்கிறார்.

இந்நிலையில் தான் ஏன் ஹெல்மெட் அணியவில்லை ? என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவிடம் ஒரு கலந்துரையாடலின் போது விவ் ரிச்சர்ட்ஸ் பகிர்ந்துள்ளார். அதில், “பேஷனாக பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில், அந்த அளவிற்கு நான் ஈடுபாடு கொண்டிருந்தேன். நான் விரும்பும் பேட்டிங்கை விளையாடும்போது இறந்தால் கூட பரவாயில்லை என்று என்றிருந்தேன். அப்படி நான் விரும்பிய பேட்டிங்கின்போது இறந்திருந்தால், அதைவிடப் பாக்கியம் வேறில்லை” என்று கூறியுள்ளார். 

அத்துடன், “நான் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களையும், வீராங்கனைகளையும் பார்ப்பேன். அவர்கள் மிகுதியான அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பார்கள். ஒரு கார் ரேஸில் ஈடுபடும் வீரருக்கு இருக்கும் ஆபத்தைவிட, பெரிதான ஆபத்து வேறு என்ன இருக்கிறது ?” என்று தெரிவித்துள்ளார்.

68 வயது நிரம்பிய ரிச்சர்ட்ஸ், சர்வதேச அளவில் 121 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8,540 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6,721 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 291 ரன்னும், ஒருநாள் போட்டியில் 189 ரன்னும் இவரது அதிக பட்ச ஸ்கோர் ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com