வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை

வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை

வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை
Published on

டைமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா.

அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் லுசானேவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து, டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். அதோடு 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.

அந்தவகையில் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஈட்டி எறிதல் போட்டியில்  நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடந்த காமென்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விளையாட்டை தொடர முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிக்க: கபடி வீரர்களின் ஆடைகளில் அரசியல் கட்சி, சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது - நீதிமன்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com