ஒரே ஸ்டம்பிங்கில் ஆட்டத்தை மாற்றிய தோனி

ஒரே ஸ்டம்பிங்கில் ஆட்டத்தை மாற்றிய தோனி

ஒரே ஸ்டம்பிங்கில் ஆட்டத்தை மாற்றிய தோனி
Published on

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மகேந்திர சிங் தோனி செய்த ஸ்டம்பிங் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றிக்கு வித்திட்டது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. இலங்கை அணியின் தரங்கா 36 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி வந்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அவர் விளாசினார். பாண்ட்யா வீசிய 9-வது ஓவரில் தரங்கா 5 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார்.

தரங்காவின் அதிரடியால் இலங்கை அணி 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குல்தீப் யாதவ் வீசிய 28வது ஓவரின் முதல் பந்தில் தரங்கா இறங்கி அடிக்க முற்பட தோனி உடனடியாக ஸ்டம்பிங் செய்தார். மிகவும் மயிரிழையில் தரங்கா அவுட் செய்யப்பட்டது மூன்றாவது அம்பயர் மூலம் தெரிந்தது. குல்தீப் யாதவ் பந்துவீசுவதற்கு முன்பு தோனி அவரிடம் சென்று ஏதோ பேசிவிட்டு வருகிறார். அடுத்த பந்திலே விக்கெட் விழுந்தது. தரங்கா ஆட்டமிழந்த போது இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது. தரங்கா விக்கெட் இழந்ததை அடுத்து இலங்கை அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்து 215 ரன்களுக்குள் சுருண்டது.

தோனி ஸ்டம்பிங் செய்ததை நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கிரீஸை விட்டு வெளியே செல்லும் போது ஸ்டம்பிற்கு பின்னால் இருப்பது தோனி என்பதை மறந்துவிடக் கூடாது என்று அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com