லெக் வாலிபால் விளையாடும் தோனி!

லெக் வாலிபால் விளையாடும் தோனி!

லெக் வாலிபால் விளையாடும் தோனி!
Published on

மழையால் டி-20 ஆட்டம் தாமதம் ஆன போது, முன்னாள் கேப்டன் தோனி நியூசிலாந்து வீரர்களுடன் ஜாலியாக லெக் வாலிபால் விளையாடிய வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது.  

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து பெய்த மழையால் ஆட்டம் தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதன் பின்பு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை 8 ஓவர்கள் குறைத்து ஆட்டத்தை தொடக்கினர். இந்த நிலையில் மைதானத்தில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நியூசிலாந்து வீரர்களுடன் உள்விளையாட்டு அரங்கில் லெக் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தார். தோனி விளையாடும் இந்த வீடியோவை நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வாலிபாலுக்கு கட்டப்படும் வலை இல்லாததால் தோனி மற்றும் நியூசிலாந்து வீரர்கள் குப்தில், டாம் புரூஸ் ஆகியோர் நாற்காலியை நடுவில் வைத்து விளையாடுகிறார்கள். இந்த வீடியோ வெளியாகி 15 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com