அதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட்ரி கொடுத்த தோனி: வீடியோ

அதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட்ரி கொடுத்த தோனி: வீடியோ
அதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட்ரி கொடுத்த தோனி: வீடியோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தோனியைப் பற்றிய தகவல்களை அவர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தோனி எப்போது பயிற்சிக்காக சென்னைக்கு வருவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். தோனி சென்னைக்கு வருவதில் சில நாட்கள் தாமதமானதால் ரசிகர்களின் ஏக்கம் கூடிக் கொண்டே போனது. ஒரு வழியாக தோனி நேற்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

தோனி சென்னைக்கு வந்துள்ள நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நிச்சயம் அவர் பயிற்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்க தோனியின் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பெருமளவில் கூடிவிட்டார்கள். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தோனியும் இன்று பயிற்சிக்கு வந்து சேர்ந்தார். அரங்கமே அதிரும் அளவிற்கு அப்படியொரு கரகோஷம். தோனி.. தோனி.. தோனி என்று விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ரசிகர்கள் அந்தப் பெயரை உரக்க முழங்கினார்கள்.

இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தோனி கெத்தாக பேட்களுடன் பயிற்சி வலைக்குள் வருகிறார். தன்னுடைய பேட்டில் ஒன்றினை எடுத்துக் கொண்டு பேட்டிங் செய்ய ஆயத்தமாகிறார். சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லாத வெளியே இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஒரு விருந்தாக நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே தோனி சென்னை விமான நிலையத்திற்கு வந்தது, அவர் தங்கும் நட்சத்திர விடுதிக்கு வந்தது, தொடர்பான காட்சிகளை கொண்ட வீடியோவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டிருந்தது. அது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக இருந்தது. ஐபிஎல் தொடரில் தோனியின் விளையாட்டைக் காண இந்த வீடியோக்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தோனி இன்றைய மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டது தொடர்பாக அவரது ரசிகர்கள் பல வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒரு வீடியோ தோனி இரண்டு சிக்ஸர்களை பறக்கவிடுகிறார். மேலும், மைதானத்தில் ஊழியர்களுடன் தோனி உரையாடுவதைப் போன்ற வீடியோ ஒன்றினையும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com