‘எதிரணி மீதும் அக்கறை காட்டிய தோனி’ - நெகிழ்ந்த பங்களாதேஷ்

‘எதிரணி மீதும் அக்கறை காட்டிய தோனி’ - நெகிழ்ந்த பங்களாதேஷ்
‘எதிரணி மீதும் அக்கறை காட்டிய தோனி’ - நெகிழ்ந்த பங்களாதேஷ்
Published on

தோனியின் பெருந்தன்மையால் பங்களாதேஷ் அணியினர் நெகிழ்ச்சி அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 10வது பயிற்சிப் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இங்கிலாந்திலுள்ள சோபியா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசியது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான் 19 மற்றும் 1 ரன்னில் வெளியேறி சொதப்பினர். ஆனால் அதன்பின்னர் வந்த ராகுல் மற்றும் தோனி சதம் அடித்து அசத்தினர். இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, 40வது ஓவரை பங்களாதேஷ் அணியின் பவுலர் சபீர் வீசும்போது ஃபீல்டிங்கில் சிறு பிழை இருந்தது. அதைக்கண்ட தோனி எதிரணி தானே என்று நினைக்காமல் அதனை சரிசெய்தார். இதனை பவுலர் சபீரும் உடனே ஒப்புக்கொண்டார். எதிரணிக்கும் உதவும் எண்ணம் கொண்ட தோனியின் பெருந்தன்மையை கண்டு பங்களாதேஷ் அணியினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் எதிரணிக்கு உதவும் தோனியின் இந்தச் செயல் ஒன்றும் புதிதல்ல. தோனியை பொறுத்தவரை கிரிக்கெட்டில் யாரையும் நேர்மையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மற்றபடி ஒருவருக்கு தன்னிடம் இருக்கும் திறமையை கற்றுக்கொடுப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவர் தோனி. 

ஐபிஎல் போட்டிகளில் பல நேரங்களில் போட்டி முடிந்த பின்னர், எதிரணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரைகளையும், விளையாட்டு யுக்திகளை கற்றுக்கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தோனியிடம் விளையாட்டு யுக்திகளை கேட்டு கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com