``என்னோட ரோல் மாடல் யாருன்னா...”- தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்!

``என்னோட ரோல் மாடல் யாருன்னா...”- தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்!

``என்னோட ரோல் மாடல் யாருன்னா...”- தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்!
Published on

தனது ஐடியல் ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலை கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றாலும்கூட, அவரை ஆட்டத்தில் இருந்து விலக்குவது என்பது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று. களத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தோனி என்பவர் மிகவும் உத்வேகம் தரும் ஆளுமைகளில் ஒருவராக இருந்து வருகிறார். மூன்று பெரிய ஐசிசி கோப்பைகளை வென்ற உலகின் முதல் கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டும் தான். தோனியின் தலைமையின் கீழ், இந்தியா 2007 இல் டி20 உலகக் கோப்பையையும், 2011 இல் ஒருநாள் உலகக் கோப்பையையும், 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது.

இந்நிலையில் தனது ரோல்மாடல் யார் என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலை கூறியிருக்கிறார் எம் எஸ் தோனி. பெங்களூருவில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எஸ் தோனி குளோபல் பள்ளியில் ஏராளமான பள்ளி மாணவர்களுடன் உரையாடியபோது, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “எனது கிரிக்கெட் ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர்தான். நானும் உங்களைப் போலவே தான் இருந்தேன். சச்சின் விளையாடுவதைப் பார்த்து, அவரைப் போல் பேட் செய்ய விரும்பினேன். பின்னர் தான் நான் அவரைப் போல விளையாட முடியாது என்பதை உணர்ந்தேன். ஆனால் என் இதயத்தில், நான் எப்போதும் அவரைப் போலவே விளையாட விரும்புகிறேன். எனக்கு எப்போதும் அவர் தான் முன்மாதிரி” என்று கூறியுள்ளார்.

மேலும் பள்ளியில் உங்களுக்குப் பிடித்த பாடம் எது என்று கேட்டதற்கு, தோனியின் பதில் கூட்டத்தை சிரிப்பில் ஆழ்த்தியது. "விளையாட்டு ஒரு பாடமாக தகுதி பெறுமா?" என்று அவர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, இன்னும் ஐபிஎல்லில் சிஎஸ்கேயை வழிநடத்துகிறார், மேலும் அவர் ஐபிஎல் 2023 இல் விளையாடுவார் என்றும் கூறியுள்ளார். ஐபிஎல் 2022ல் ஜடேஜா பாதியில் விலகிய பிறகு தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com